நான்காம்ஆண்டு நினைவின் வழியில் நனையும் விழிகள்!….
பாலசுப்பிரமணியம் சிவஞானதாஸ்(பைலட் ஞானம்)
வல்வையின் மைந்தனாய் வானிலே தெய்வமாய்
28.12.1966 29.04.2012
நாலுவருடம் கடந்ததென்று நாட்கள்
சொல்லுது
நாங்கள்மட்டும் அப்படியே உறைந்து
போனதேன்?
காலம்முழுக்க உங்கள்நினைவே
வாழ்க்கையானது
கடமைபிழைத்த கடவுளுக்காய் மனது
நோகுது!…..
நினைத்துப்பார்த்தால் கடந்தகாலம்
இனிமையானது
நீங்கள் மறைந்தபின்னால் எங்கள்வாழ்கை
இருட்டாய்யானது
கனவுவந்து கலைந்தது போல் உங்கள்
நினைவுதோன்றுது
கவலைமட்டும் மிஞ்சியதால் கண்கள்
கடலாய்மாறுது!….
ஞானமில்லா ஞாலத்திலே வாழ்கை
கனக்குது
ஞானம் உங்களைத்தான் தேடியெங்கும்
பார்வை பறக்குது
கானம்இசைத்த புல்லாங்குழல்கள் முகாரி
இசைக்குது
ஞானம் உங்கள் முகவரிக்காய் எங்கள்
மனசு அலையுது
மனசு அலையுது!…
என்றும்பிரியா உங்கள்நினைவுடன்
அன்பான மனைவிபிள்ளைகள்
28.04.2016