யாழ். பல்கலை. மாணவர்களை விடுதலை செய்யுமாறு கோரி இணையவழி மகஜர் கையெழுத்துப் போராட்டம்

அரச படைகளினால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உடன் விடுதலை செய்யக்கோரி, இணையவழி மகஜர் கையெழுத்திடும் போராட்டத்தினை நடாத்த சமஉரிமை இயக்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய நாளைய தினம் இராஜகிரிய லயன்ஸ் கழகத்தில் இணையவழி மகஜர் கையெழுத்திடும் போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இவ் இணையத்தள மகஜர் கையெழுத்து போராட்டத்தில் அனைவரையும் நேரடியாகவோ இணையம் மூலமாகவோ பங்குபற்றுமாறு சம உரிமை இயக்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.