பிணையக் கைதியாக பிடித்து வைத்திருந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நபரை கொன்று விட்டதாக சோமாலிய தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2009-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டெனிஸ் அலெக்ஸ் என்பவரை சோமாலிய தீவிரவாதிகள் பிணையக் கைதியாக பிடித்து சென்றனர்.
அந்நபரை மீட்பதற்கு கடந்த வாரம் பிரான்ஸ் இராணுவம் முயற்சி செய்தது. அந்த முயற்சியை முறியடித்த தீவிரவாதிகள், அவரை கொலை செய்து விட்டதாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், பிரான்ஸ் ஜனாதிபதிக்கு செய்தி ஒன்றை அலெக்ஸ் வாசிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
ஆனால் அலெக்சை மீட்கும் முயற்சியின் போது, அவர் கொல்லப்பட்டு விட்டதாக பிரான்ஸ் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.