நாய்கள் இரண்டு ஸ்கைப்பினுடாக ஊளையிட்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்திய காணொளியொன்று தற்போது இணையத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.அமெரிக்காவின் வொஷிங்டனைச் சேர்ந்த நாயொன்றும், ஐக்கிய இராச்சியத்தில் வாழ்ந்துவரும் நாயொன்றுமே இவ்வாறு ஸ்கைப்பில் சந்திக்கொண்டுள்ளன. இந்த இரு நாடுகளையும் சேர்ந்த நண்பர்கள் தமது நாய்களை ஸ்கைப் வீடியோவில் சந்திப்பதற்கு வாய்ப்பளித்தனர். அதன் பின்னர் நாய்கள் இரண்டும் தமது உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் ஆச்சரியமூட்டுவதாக அமைந்ததாக அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். குறித்த நாய்கள் இரண்டும் பொக்ஸ் டெரியர் இனத்தைச் சேர்ந்தவை.