உலக பொருளாதாரமே நிலைகுலைந்த நிலையிலும், சீனாவின் பொருளாதாரம் தொடர்ந்து படுவேகத்தில் முன்னேறி கொண்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 13 ஆண்டுகளில் முதன் முறையாக மிக குறைவான அளவான 7.8 சதவிகித வளர்ச்சிக்கு சரிந்துள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு 10.4 சதவிகிதமாக இருந்த வளர்ச்சி, 2011ஆம் ஆண்டில் 9.3 சதவிகிதமானது. இந்நிலையில் இப்போது மேலும் சரிந்து 7.8 சதவிகிதத்துக்கு வந்துள்ளது.
சீனாவின் பொருளாதாரம் பெரும்பாலும் ஏற்றுமதியை சார்ந்தே உள்ளது. சீனப் பொருட்களை நம்பித்தான் பல அமெரிக்க, ஐரோப்பிய சூப்பர் மார்க்கெட்களே இயங்கி வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்கா, ஐரோப்பாவில் நிலவும் தொடர் பொருளாதார மந்தம் காரணமாக சீனாவின் இறக்குமதி பெருமளவு குறைந்துவிட்டது, இதுவே பொருளாதார சரிவுக்கு காரணம் என கருதப்படுகிறது.