புதிதாக உதயமான 1978 அணிக்கும், 1974 அணிக்கும் இன்று நடை பெற்ற நட்பு ரீதியிலான உதை பந்தாட்ட போட்டி இன்று மிச்சம் பகுதி ‘கொறிச் பார்க் ‘பகுதியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது….
1978 அணி புதிதாக அறிமுமானதாக இருப்பினும் அனுபவம் வாய்ந்த 1974 அணியை ஆரம்பத்தில் மிகவும் திக்கு முக்காட வைத்து விட்டது ….
முதல் அரை நேரத்தில் 1978 அணி 02 கோல்களை போட்டு வியப்பில் ஆழ்த்தி விட்டது…
தொடர்ந்த மறு பகுதி ஆட்டத்தில் 02_04 என்ற கோல் கணக்கில் 1974 நண்பர்கள் குழு வெற்றியை தனதாக்கி கொண்டது…
எதிர்வரும் 24 திகதி நடை பெற இருக்கும் நட்பு குழுக்களுக்கான உதைபந்தாட்ட சுற்று போட்டிக்கான பயிற்சி இப்போட்டி என்பது குறிப்பிட தக்க விசயமாகும் …