தரணியில் தமிழனுக் கொன்றொரு தேசம் அமையத்தான் போகின்றது அது தமிழீழம் -வைகோ!
சென்னையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 36ஆவது சென்னை புத்தக கண்காட்சியில் அரங்க நிகழ்வில் சொல்லாற்றல் என்ற தலைப்பில் வைகோ அவர்கள் கருத்துரை நிகழ்தும்போது இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
உலக விடுதலைப்போராட்ட வரலாற்று நிகழ்வுகளை உள்ளடக்கிய போராட்ட வீரர்களின் பேச்சுக்கள் இனஉணர்வாளர்களின் பேச்சுக்கள் அவர்களின் சொல்லாற்றல் எவ்வாறு மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டது என்றும் அவர்களின் சொல்லாறலால் பேச்சு திறனால் மக்கள் மத்தியில் எவ்வாறு இடம்பிடித்தார்கள் என்ற நீண்பெரும் உரையினை வைகோ நிகழத்தியுள்ளார்.
இரத்தத்தை தாருங்கள் நான் விடுதலையை பெற்றுத்தருகின்றேன்,சுதந்திரத்திற்கு நாம் கொடுக்கின்ற விலை அதுதான்,மரணத்தோடு ஒப்பந்தம் செய்ய எழுந்து நில்லுங்கள் சாதாரண கையினால் அல்ல எங்கள் நாடி நரம்புகளில் பீரிட்டுவருகின்ற குருதியில் கையெழுத்து இடுங்கள் நான் சாட்டியமாகின்றேன் என்று பர்மிய போர்கலையில் எழுப்பிய முழக்கம் எல்லா காலங்களுக்கம் அனைத்து விடுதலை கரங்களுக்கும் நாளை மலரபோகின்ற தமிழீழத்திற்கு அமைகின்ற விடுதலை கரத்திற்கும் உந்துதல் அளிக்கின்ற வங்கத்தின் சிங்கத்தின் முழக்கமாகட்டும் என்று தொடங்கிய வீர செற்பேச்சுக்களால் வைகோ உலக விடுதலை போராட்ட வரலாற்றில் சொல்லாற்றால் எவ்வாறு பயன் படுத்தப்பட்டது என்று விரிவாக எடுத்துரைத்தார்.