மாணவர்களுக்கு விடுதலையில்லை? – உயர்கல்வி அமைச்சரின் கருத்தினால் சந்தேகம்!

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புலம்பெயர் புலி ஆதாரவாளர்களுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளார்கள் என விசாரணைகளின் போது உறுதிப்படுத்தப்பட்டால் அவர்கள் தற்போது விடுதலை ஆக மாட்டார்கள் என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று முன்தினம் இடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்துத்தெரிவித்ததாவது,

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புலம்பெயர் புலி ஆதரவாளர்களுடன் தொடர்புகளை வைத்திருப்பது விசாரணையின் போது நிருபிக்கப்பட்டால் அவர்களுக்கான புனர்வாழ்வு தொடருமே தவிர அவர்கள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள்.

அத்துடன் இந்த நாட்டு மக்களைக் கொன்று குவித்து சொத்துக்களை அழித்த பயங்கரவாதி வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு தீபமேற்றி நினைவஞ்சலி செலுத்துவதற்கு பல்கலைக்ழககத்தில் இடமளிக்க முடியாது.

எனவே இதற்கு முன்னின்று செயற்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் கைது செய்யது விசாரணை செய்யப்பட்டு வருவகின்றது.

எனினும் கைதான மாணவர்களுக்கும் புலம்பெயர் விடுதலைப் பலிகள் ஆதரவாளர்களுக்கும் தொடர்புகளை இருக்கின்றது என சந்தேகிக்கப்படுகின்றது. அவ்வாறு அவர்கள் தோடர்புகளை வைத்திருந்தார்களாயின் அவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கப்படும்.

அத்துடன் மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டால் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று கூறிவரப்பட்ட நிலையில் யாழ் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் வழமைக்குத் திரும்பியுள்ளதுடன் அங்கு எந்த விதமான பிரச்சினையும் கிடையாது.

இதேவேளை, மொரட்டுவப் பல்கலைக்கழக மாணவர் மீதான தாக்குதலைத் திட்டமிட்டு முன்னிலை சோசலிச கட்சியிரேன நடத்தினர் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.