அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 நபர், மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர்.
நியூ மெக்ஸிகோவில் உள்ள அல்புகர்க் நகரில் ஞாயிறு மாலை இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. 15 வயதான சிறுவன் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 குழந்தைகள் மற்றும் 2 பெரியவர்களை சுட்டுக் கொன்றான்.
அந்தச் சிறுவனை உடனடியாக கைது செய்த பொலிசார், அவனிடம் இருந்து துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர். கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவன் மீது வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் தெரிவித்தனர்.
அந்த குற்றவாளியின் பெயரை பொலிசார் வெளியிட மறுத்துவிட்டனர். எனினும் அவனுடைய வீட்டை சோதனை செய்து அங்கிருந்து துப்பாக்கி தோட்டாக்களை கைப்பற்றியுள்ளனர்.
இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு அமெரிக்காவின் சிறுவர்கள் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 30 பாலகர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் மற்றொரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர்தான் துப்பாக்கிக் கலாசாரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் ஒபாமா சில நடைமுறைகளை தனது கொள்கையாக வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.