Search

மட்டக்களப்பில் குடும்பஸ்தரை காணவில்லை!

மட்டக்களப்பு சிகரட் கம்பனி ஒன்றில் தொழில்புரியும் செல்வநாயகம் வீதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கடந்த இரண்டு தினங்களாக காணாமல் போயுள்ளார் என அவரது உறவினர்களால் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் கடந்த சனிக்கிழமை காலை வழமைபோல் சிகரட் விநியோகத்திற்காகச் சென்றுள்ளார். அன்றைய தினம் பகல் இவரது முச்சக்கர வண்டி காத்தான்குடி நகரின் பிரதான வீதியில் வைத்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர் குறித்து அவரது மனைவி மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அதேநேரம், மேற்படி குடும்பஸ்தர், 4 இலட்சத்து 95 ஆயிரம் ரூபா பணத்துடன் தலைமறைவாகியுள்ளார் என சிகரட் கம்பனி உரிமையாளரும் பொலிஸில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *