வல்வை மகளிர் மகாவித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை அனுமதிப்பதற்கான கால்கோள் விழா கடந்த 18 ஆம் திகதி அதிபர் செல்வி இ.சுப்பிரமணியக் குருக்கள் தலைமையில் கல்லுரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. தரம் 1 இல் 2012 ஆம் ஆண்டிற்கு அனுமதி பெற்றுள்ள மாணவர்கள் தரம் 2 இல் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களால் வரவேற்கப்பட்ட இந்நிகழ்வில் பெற்றார்களும் கலந்து கொண்டனர். இந் நிகழ்வின் முதன்மை அதிதியாக வடமராட்சி வலயக் கல்விப் பணிமனையின் ஆரம்பப் பிரிவின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.தில்லைநாதன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.