Search

வவுனியா ரம்பைக்குளம் மகாவித்தியாலய மாணவன் கோகுலதாசன்_அபிசிகன் 195 புள்ளிகளைப் பெற்று வட_மாகாணத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்றிரவு வெளியாகியது. இதன்படி தெரியவந்த வட மாகாணப் பாடசாலை நிலைவரங்களின்படி வவுனியா ரம்பைக்குளம் மகாவித்தியாலய மாணவன் #கோகுலதாசன்_அபிசிகன் 195 புள்ளிகளைப் பெற்று வட_மாகாணத்தில் #முதலிடம் பெற்றுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் இந்து_ஆரம்ப பாடசாலை மாணவி உமாசங்கர்_ஜயனி 194 புள்ளிகளைப் பெற்று யாழ்.மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ள அதேவேளை, மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இதேபோன்று யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் கேதீசன் துசானன் மற்றும் புனித ஜோன் பொஸ்கோ மகாவித்தியாலய மாணவன் டில்ஷாந் பற்றிக் ஆகிய இருவரும் 191 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 182 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தை மூன்று மாணவர்கள் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

விசுவமடு விஷ்வநாதர் ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த முரளிதரன் அபிசங்கர், முகுந்தன் தேனகன், சந்திரசேகரம் புகழரசன் ஆகிய மூவமே இவ்வாறு 182 புள்ளிகளைப் பெற்றவர்களாவர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்காக வெட்டுப் புள்ளி 153 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னர் மாவட்டங்களுக்காக வெட்டுப்புள்ளி 152 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தேசிய அளவில் தமிழ் மொழி மூலம் அதிகூடிய வெட்டுப் புள்ளி 154 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள அதேவேளை, சிங்கள மொழி மூலம் 160 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *