Search

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் நம்மூர் பாடசாலைகளின் புள்ளி விபரங்கள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் நம்மூர் பாடசாலைகளின் புள்ளி விபரங்கள்

நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று அரச இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முடிவுகள் இன்று உத்தியோகபூர்வமாக பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளிகள் கொழும்பு வெட்டுப்புள்ளி 154 ஆகவும், யாழ்பாணம், மட்டக்களப்பு மற்றும் வவுனியாவிற்குரிய வெட்டுப்புள்ளி 153 ஆகவும், மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுற்குரிய வெட்டுப்புள்ளி 152 ஆகவும், திருகோணமலைக்குரிய 151 என அறிவிக்கப்பட்டுள்ளது.

வல்வை_சிதம்பராக்_கல்லூரியில்
ஒரு மாணவன் சித்தியடைந்துள்ளார்.
தனுஷ்காந்த் 159 புள்ளிகளைப்பெற்றுள்ளார்.

வல்வை_மகளிர்_மகா_வித்தியாலயத்தில்
ஒரு மாணவர் சித்தியடைந்துள்ளார்.
வை.யோகன் 154 புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்துள்ளார்.

சிவகுரு_வித்தியாசாலையில்
இரு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் மு.வினுசியன் 163 புள்ளிகள்
டீ.தனுசன் 162 புள்ளிகள் பெற்று இருமாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.

தொண்டைமானாறு
வீரகத்திப்பிள்ளை_மகா_வித்தியாலயத்தில்
7 மாணவர்கள் சித்தி அடைந்துள்ளார்.

சித்தி அடைந்துள்ள மாணவர்கள் வருமாறு

செல்வன் கி.அபிநயன் 178 புள்ளிகள்
செல்வன் நா.தருண் 177 புள்ளிகள்
செல்வன் ஜெ.காஜாத் 163 புள்ளிகள்
செல்வன் கோ.கார்த்திக் 162 புள்ளிகள்
செல்வன் வி.விஷ்ணுராஜ் 155 புள்ளிகள்
செல்வன் ஆ.மகிஷன் 152 புள்ளிகள்
செல்வி இ.யதுர்ஷிகா 152 புள்ளிகள்
ஆகியோர் சித்தியடைந்துள்ளனர்

வல்வெட்டித்துறை
அமெரிக்கன்_தமிழ்_கலவன்_பாடசாலையில்
நான்கு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
உ.வர்ணிகா 174
உ.பிரதீபா 169
கு.கோபிகா 158
பா.கலைநிலவன் 155 புள்ளிகள் பெற்றனர்.

கெருடாவில்_இந்து_தமிழ்_கலவன்_பாடசாலையில்
செல்வன் சு.தமிழ் மாறன் 159 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார்.

அதே சமயத்தில் யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவி உ.ஜயனி 194 புள்ளகளைப் பெற்று யாழ் மாவட்டத்தில் முதலாவதாக வந்துள்ளார். இவர் அகில இலங்கை ரீதியாக 3வது இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *