சர்வதேச ரீதியில் சிறிலங்காவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் விடுதலைப் புலிகள் முன்னெடுக்கும் திட்டங்கள் இன்னமும் முடிவடையவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மாற்றங்கள் நிகழும் போது, விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களால் குழப்பங்கள் விளைவிக்கப்படுகின்றன.
சிறிலங்காவுக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிசைச் சலுகையை வழங்குவது பற்றி ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானிக்கவிருந்த சந்தர்ப்பத்தில், சனல்-4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்ட காணொளி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழத்தை அமைப்பது என்ற அடிப்படைக் கோட்பாட்டில் இருந்து விடுதலைப் புலிகள் இன்னமும் விலகவில்லை. இந்த இலக்கை அடைவதற்கான பொறிமுறைகள் மாத்திரமே மாறியுள்ளதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்தார்.