போதைப் பொருள் கடத்திய குற்றத்துக்காக, பிரிட்டன் பெண்ணுக்கு, இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனை சேர்ந்த லிண்ட்சே ஸ்டான்டிபோர்ட் (56) என்ற பெண்ணுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு, ஐந்து கிலோ, “கொக்கைன்’ என்ற போதை பொருளை கடத்தினார்.
இந்தோனேசிய சட்டப்படி போதை கடத்தல் குற்றத்துக்கு, மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.
இந்தோனேசியாவுக்கு, போதை பொருள் கடத்தி வந்ததை, லிண்ட்சே, நீதிபதியிடம் ஒப்புக்கொண்டார்.
போதை கடத்தலை ஒப்புக்கொண்டதாலும், விசாரணைக்கு நல்ல முறையில் ஒத்துழைத்த காரணத்தாலும், லிண்ட்சேவுக்கு, 15 ஆண்டு சிறை தண்டனை அளிக்கலாம்’ என, அரசு தரப்பு வக்கீல், பரிந்துரை செய்தார்.
ஆனால், இதை நீதிபதிகள் மறுத்து விட்டனர். “போதை கடத்தல் பெரிய குற்றம்.
இதற்கு தண்டனை அளிப்பதில் பாகுபாடு காட்ட முடியாது. எனவே, லிண்ட்சேவுக்கு, மரண தண்டனை விதிக்கிறோம்’ என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.