
ஏற்கனவே விலங்குகளுக்கு வித்தியாசமான உணவுகளை கொடுத்துள்ளோம். விளையாட்டு பொருட்களை மாற்றி உள்ளோம். பார்வையாளர்களுடனான தொடர்பிலும் புதுமைகளை புகுத்தி உள்ளோம். இப்போது ஐபேட் வழங்கி உள்ளோம். அவற்றின் மூலம் கேம் விளையாடுவது, ஓவியங்கள் வரைவது, பாட்டு கேட் பது என மனித குரங்குகள் உற்சாகமாக உள்ளன. ஐபேட்களில் கேம்ஸ் உள்பட 10 விதமான அப்ளிகேஷன்களை பயன்படுத்த மனித குரங்குகள் கற்றுக் கொண்டுள்ளன. இந்த பூங்காவில் உள்ள உராங்குட்டான்கள் டிரம்ஸ், பியானோ போன்ற இசைக் கருவிகளை வாசிக்கும்.