பொருளாதார பின்னடைவால் வேலையிழந்து தவிக்கும் 40 லட்சம் பேர்

உலகம் முழுவதும் பல நாடுகளில் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றன.

இதன் காரணமாக உலகம் முழுவதும் வேலை இழப்புகள் அதிகமாகி வருவதாக உலக தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் தற்போது 19 கோடியே 70 லட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளனர்.

அதாவது வேலை செய்யும் திறனுள்ளவர்களில் 6 சதவீதம் பேருக்கு வேலையில்லை. கடந்த 1 ஆண்டில் மட்டும் 40 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். 24 வயதுக்கு குறைவானவர்களுக்கு வேலை கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் 3 -ல் ஒரு பங்கினர் ஒரு வருடத்துக்கு மேலாக வேலையில்லாமல் இருப்பதாகவும் உலக தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.