Search

வின்டோஸ் புதிய போன் ஆபரேடிங் சிஸ்டம், Windows Phone 8 என்ன சொல்கிறது?

வின்டோஸ் போன் ஆபரேடிங் சிஸ்டம், Windows Phone 8 அறிமுக நிகழ்வில் மைக்ரோசாப்ட் சி.இ.ஓ. ஸ்டீவ் பால்மர், “உங்களை போலவே வின்டோஸ் போன்-8 சிஸ்டமும் ஒரு நிஜ மனிதன்” என்றார்.

சான்பிரான்சிஸ்கோவில் நேற்று நடைபெற்ற அறிமுக நிகழ்வில், தற்போது மார்க்கெட்டில் உள்ள அனைத்து போன் சிஸ்டங்களையும்விட மைக்ரோசாப்ட் சிஸ்டம் உயர்ந்தது என்று ஆளாளுக்கு அறிவித்துக் கொண்டார்கள்.

“இன்றைய தேதியில் உங்களால் வாங்கக்கூடிய அதி உன்னத பர்சனஸ் ஸ்மார்ட் போன் சிஸ்டம் இதுதான். இதிலுள்ள மற்றொரு சிறப்பு அம்சம், உங்கள் பர்சனல் கம்ப்யூட்டருடன் (வின்டோஸ் பிளாட்பாரம்) மிக துல்லியமாக இணைந்து செயல்படக்கூடியது. அடுத்து வரவுள்ள வின்டோஸ்-8 ஆபரேட்டிங் சிஸ்டத்துடன் இன்டர்கிரேட் ஆகக்கூடிய சிஸ்டம் இது” என்றார் ஸ்டீவ் பால்மர்.

மைக்ரோசாப்டின் சொந்த Windows Phone 8 அறிமுக நிகழ்வுக்கு முன், அதே சிஸ்டத்தை பற்றி ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர்கள் Nokia, HTC, Samsung ஆகிய நிறுவனங்களின் தனித்தனி நிகழ்வுகளும் நடந்து முடிந்துள்ளன. Windows Phone 8 ஆபரேடிங் சிஸ்டத்தை கொண்டு வெளியான முதலாவது ஸ்மார்ட் போன், HTC தயாரிப்பு. அதையடுத்து, நோக்கியா தமது Lumia 920 மாடலை, வின்டோஸ் சிஸ்டத்துடன் மார்க்கெட்டில் அறிமுகம் செய்தது. இவர்கள் அனைவருமே மைக்ரோசாப்ட் புகழ் பாடினர்.

அப்படியிருந்தும் மைக்ரோசாப்ட் தனியாக எதற்காக ஒரு அறிமுக நிகழ்வை ஏற்பாடு செய்ய வேண்டும்?

சிம்பிளான பதில், மைக்ரோசாப்ட் நிகழ்ச்சி நடந்த அதே தினத்தில்தான், கூகுள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன், மற்றும் டேப்லட் Nexus 4, Nexus 10 ஆகியவை பற்றிய அறிவிப்பு வெளியானது!




Leave a Reply

Your email address will not be published.