கிளிநொச்சியில் பொலீஸாருக்கும் பொது மக்களுக்குமிடையில் முறுகல் நிலை தொடர்ந்து கிளிநொச்சியில் அதிகளவு பொலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்

கிளிநொச்சியில் பொலீஸாருக்கும் பொது மக்களுக்குமிடையில் முறுகல் நிலை தொடர்ந்து கிளிநொச்சியில் அதிகளவு பொலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்

 

கிளிநொச்சியில் அதிகளவு பொலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்சற்று முன்னர் கிளிநொச்சி நகர் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகின்றது.வாகனம் ஒன்றின்மீது தாக்குதல் நடத்தபட்டுள்ளதோடு அதிகளவான கலகமடக்கும் பொலீசாரும் விசேட அதிரடி படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

பொலிசார் மற்றும் இளைஞர்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்ப்பட்டத்தை அடுத்து பெரும் பதற்றம்  ஏற்பட்டுள்ளதுடன்   அங்கு கடமையில் இருந்த பொலிசார் ஒருவர் மீது இனம் தெரியாத நபர் ஒருவரால் தாக்குதல் நடத்தபட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொலிசாருக்கும் மக்களுக்கும் இடையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பின்னர் கலகம்  அடக்கும் பொலிசார் இறக்கப்பட்டு  நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும் தற்போதும்   அங்கு பெரும் பதற்ற நிலை காணப்படுகிறது

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published.