விற்பனைக்கு வருகின்றது Samsung – இன் Ativ Odyssey கைப்பேசிகள்

புதிய தொழில்நுட்பங்களை உட்புகுத்தி கைப்பேசிகளை வெளியிட்டுவரும் Samsung நிறுவனம் தற்போது தனது புதிய உற்பத்தியான Samsung Ativ Odyssey கைப்பேசிகளை அறிமுகப்படுத்துகின்றது.

முற்றுமுழுதாக மைக்ரோசொப்டின் விண்டோஸ் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இக்கைப்பேசிகள் 4 அங்குள அளவு மற்றும் 480 x 800 Pixel Resolution என்பனவற்றுடன் கூடிய Super AMOLED தொடுதிரையினைக் கொண்டுள்ளன.

இவற்றுடன் 1.5GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Snapdragon Processor, 5 மெகாபிக்சல் உடைய பிரதான கமெரா, 1.2 மெகாபிக்சல் உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான துணைக் கமெரா ஆகியவற்றினையும், 2,100 mAh மின்கலத்தினையும் தம்மகத்தே கொண்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.