ஈழத்தின் வெளியீட்டு வரலாற்றில் இன்னுமொரு அம்சம் வரலாற்றுச் சிறப்புமிக்க வல்வெட்டித்துறை மண்ணில் அரங்கேற இருக்கிறது. ஏற்கனவே 32 நூல்களை வெளியீடு செய்த பெருமைக்குரியவரும், ஈழத்தின் முதல் தமிழ்ப்பெண் விமானி அர்ச்சனா அவர்களின் தந்தையும், திரைப்பட இயக்குநருமான வாழ்நாள் சாதனையாளன் டென்மார்க் கி.செ.துரை அவர்கள், யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தான் வாழ்ந்த காலத்தில் பழகிய முக்கியமான சில மனிதர்களின் பதிவுகளை சுவைபட தொகுத்து ‘மனப்பட மனிதர்கள்’ எனும் நூலாக்கியுள்ளார். அழகிய விழாக்கோலத்துடன் ‘ ரியூப் தமிழ் ‘ வெளியீடாக உலாவரும் இந்நூலின் வெளியீட்டு விழாவானது, 12.11.2016 சனிக்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு, யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இடம்பெறவுள்ளது. இந்த நூலின் வெளியீட்டு விழாவுடன் ‘செல்லமுத்து வெளியீட்டகம்’ ‘கோபால் வெளியீட்டகம்’ மற்றும் வல்வெட்டித்துறையின் எல்லா அமைப்புக்கள் என்பனவும் இணைந்து செயலாற்றுகின்றன.
இரு வர்ணங்களிலான அட்டைப் படத்துடன் இந்நூல் வெளியாகிறது.
