மாவட்டரீதியில் மனோகரா விளையாட்டு கழகம் நடாத்திவரும் உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டியில் நேற்று இடம்பெற்ற மூன்றாம் சுற்றுப்போட்டியில் வல்வை ஆதிசக்தி வி.க பாசையூர் சென் அன்ரனிஸ் விளையாட்டுக்கழகத்துடன் மோதியது இதில் வெற்றிபெறும் அணியே சுப்பர் 8 சுற்றுக்குள் நுழையும் என்பதால் ஆட்டம் அரம்பம் முதலே பரபரப்பாக காணப்பட்டது.
முதல் பாதியாட்டத்தில் பாசையூர் சென் அன்ரனிஸ் வி.க தமக்கு கிடைத்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தி கோல் போட்டு முன்னிலை வகித்தது.
இடைவேளையின் பின்னரான இரண்டாம் பாதியாட்டத்தில் வேகத்தை வெளிப்படுத்தி விளையாடிய ஆதிசக்தி வி.க தமக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கோல் போட ஆட்டம் சமனிலையானது. இறுதிவரை மேலதிக கோல் எதுவும் போடாமல் ஆட்டம் சமனிலையானதால் பனால்டி வழங்கப்பட்டது இதில் 4:3 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்று சுப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது.