வல்வை கலை, கலாச்சார இலக்கிய மன்றத்தினருக்கு, வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ) நிதி உதவி வழங்கி உள்ளது.
வல்வை கலை, கலாச்சார இலக்கிய மன்றத்தினர் ஆண்டு தோறும் நடத்திடும் கலைப் பெருவிழாவினை இவ் வருடமும் வரும் ஜனவரி மாசம் கலைப் பெருவிழாவாக நடத்திட வல்வை நலன்புரிச் சங்கமாகிய எம்மிடம் நிதி உதவி கோரியமைக்கு அமைய, நாம் ரூபாய் ஒரு லட்சம் (RS 100,000.00 ) நிதி உதவி வழங்கி உள்ளோம் . மேலும் இவர்களின் கலைப் பயணம் மென்மோலும் சிறப்பாக வளர்ந்திட நாம் வாழ்த்துவதுடன் நாம் சகல துறைகளிலும் சிறந்து வளர்ந்திட ஒவ்வோர் வல்வையர்களும் பக்க பலமாக இருக்க வேண்டும் என்பதுடன் ,மேலும் இவர்களின் கலைத்துறை எம் பாரம்பரிய கலாச்சாரங்களை அழியாது பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கும் இதை கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம், இக் கலைப் பெருவிழா சிறப்பாக நடைபெற வல்வை நலன்புரிச் சங்கத்தினரின் (ஐ.இ) வாழத்துகள்
வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ)







