ஈழத் தமிழர்களின் பண்பாட்டுச் சின்னங்கள், வல்வையின் கல்வி,பண்பாட்டுப் பாரம்பரியம், வீரமிக்க வரலாற்றுப் பயணங்கள்,கடலோடிகளின் பாரம்பரியங்கள், நீர்வளமும் கடல்வளமும் கொண்ட வளநிறை நகரின் சிறப்பு,தமிழர் விடுதலைக் கூட்டணயின் தோற்றம்,வல்வையில் ஆயதப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்த தமிழரசுத் தலைவர், பூம்புகாரை நினைவூட்டும் வல்வையின் இந்திரவிழா, உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தினரின் பட்டத் திருவிழா, வல்வையின் சுற்றுலாத் தலங்கள்,; வரலாற்று முக்கியத்துவமுள்ள கட்டடங்கள், சாதனையாளர்கள் வரிசையில் வல்வையின் மைந்தர்கள், தேசிய விடுதலைப் போரில் வல்வையின் பங்கு, வரலாற்றுப் புகழ்பெற்ற சில ஆலயங்கள், சிறப்பு வாய்ந்த பாரம்பரிய உணவுகள், பாரம்பரிய கலை, பண்பாட்டு வடிவங்கள், நகர அபிவிருத்தியும், பிரஜைகள் குழுவும், வல்வை எழுத்தாளர்களின் நூல்கள் மற்றும் ஆய்வு நூல்கள் போன்ற மேலும் பல நூற்றுக்கும் மேற்பட்ட தலைப்புகளில்,; 50க்கும் மேற்பட்ட வர்ணப் புகைப்படங்கள் மற்றும் இருநூறு வகையான வரலாற்று முக்கியத்துவமுள்ள புகைப்படங்கள் உட்பட கனதியான அழகிய மூவர்ண முகப்புடன் வல்வை.ந.அனந்தராஜ் அவர்களின் 20 ஆவது நூலான “வல்வையின் முதுசொம்” என்ற இந்நூல்,ஈழத் தமிழர்களின் வாழ்வியல் முக்கியத் துவங்கள் பற்றிய விரிவான அரிய விடயங்களைக் தாங்கியதாக வெளிவர இருக் கின்றது. இந்நூல் வடமராட்சி வடக்கு பிரதேசசெயலாளரும்,
பிரபல கவிஞரும், பேரவையின் தலைவருமான திரு.இ.த.ஜெயசீலன் அவர்களின் தலைமையில் வெகு விரைவில் வெளிவர இருக்கின்றது.











