தொண்டமானாறு வீரகத்தி பாடசாலை

இப்பாடசாலை 1899ம் ஆண்டளவில் பல கப்பல்களை வைத்து தொழில் நடத்திய வர்த்தகர் திரு சி.வீரகத்திப்பிள்ளை அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இடம் போதாமையால் பிள்ளையார் கோயில் வடபுறம் மேலும் வகுப்புக்களை ஆரம்பித்து இரு பாடசாலைகளும் ஒரே நிர்வாகத்தில் நடைபெறுகின்றது. தற்போது விஞ்ஞானகூடம், பிரார்த்தனை மண்டபம், அடங்கிய இருமாடிக் கட்டிடங்களை தன்னகத்தேயுடைய பாடசாலையாகத் திகழ்கின்றது. திரு சி.நடேசன் அவர்களினால் மரவேலை அறையும் திரு நவரத்தினத்தின் மகள் தனது நிதியிலிருந்து மேலும் வகுப்பறைகள், மீன் வளர்ப்புத்தொட்டி ஆகியன அமைக்கப்பட்டனவாகும்.

Leave a Reply

Your email address will not be published.