LG அறிமுகப்படுத்தும் U560 ultrabook மடிக்கணினிகள்

முன்னணி இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமாக விளங்கும் LG ஆனது தனது புதிய வெளியீடாக U560 ultrabook எனும் புதிய மடிக்கணினிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

15.6 அங்குல அளவுடைய Retina திரையினை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ள இக்கணினிகள் விண்டோஸ் 8 இயங்குதளத்தில் செயற்படுவதுடன் Core i5 3337U Processor – இனையும் உள்ளடக்கியதகாக் காணப்படுகின்றது.

இவற்றுடன் முப்பரிமாண கணினி விளையாட்டுக்கள் மற்றும் வடிவமைப்பு வேலைகளுக்கு (CAD) உகந்ததான Nvidia GeForce கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தினையும் கொ்ணடுள்ளன.

மேலும் இவை வன்றட்டினைக் கொண்டதாகவும் (HDD), SSD (solid-state drive) – இனைக் கொண்டதாகவும் இருவேறு பதிப்புக்களாகக் கிடைக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published.