தழல் ஈகி முத்துக்குமாரின் உருவச்சிலைக்கு திரு.பழ .நெடுமாறன் ஐயா ,திரு .வை. கோ ஐயா ,திரு.பெ.மணியரசன் ஐயா , ஆகியோர் மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. பின்பு மேதகு.வே .பிரபாகரன் மாளிகையை திரு .பழ .நெடுமாறன் ஐயாவும் , எம்.ஜி .ஆர் .வணிகவாளகத்தை திரு .வை.கோ ஐயாவும் ,பவலேறு பெருஞ்சித்தனார் வணிக வளாகத்தை திரு.மணியரசன் ஐயாவும் திறந்து வைத்தனர். அதன் பின்பு தழல் ஈகி முத்துக்குமார் அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு கூட்டம் நடக்கும் இடத்திற்கு கால் நடையாக பேராளர்களும் ,மக்களும் பொதுக்கூட்டம் நடை பெரும் இடத்திற்கு வந்தனர் அவர்களுக்கு முன்னால் காவேரி தப்பாட்ட குழுவினர் பறையாட்டம் சிலம்பாட்டத்துடன் வந்தனர்.
(நேற்று) மாலை 6.30 மணியவில் திரு .இரத்தினவேலன் அவர்கள் வரவேற்றார் அதன் பின்பு திரு.பால்ராஜ் ,அயனாபுரம் சி.முருகேசன்,திரு.விடுதலைவேந்தன் திரு.வைகறை ,திரு.துறை ,பாலகிருஸ்ணன் ,வெங்கட்ராமன்,தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சி தலைவர் திரு.மணியரசன் ,சிறப்புரையற்றினார். திரு .நெடுமாறன் ஐயா ,இறுதியாக திரு வை.கோ.ஐயா உரையாற்றினார்.