இவ்ஆலயத்தின் வரலாற்றை நோக்கினால் இது அரசியல் பொருளாதார சமூக வரலாற்றுடன் மிகுந்த நெருங்கிய தொடர்புடையதாகவும் அதற்கு அப்பால் பக்தி வரலாற்றுடன் தொடர்புடையதாகவும் உள்ளது.இங்கு ஓடும் தொண்டமானாறு ஷவல்லிநதி|| என்ற பெயருடன் விளங்கியது. இந்நதியின் தொடு வாயிலை தொண்டான் என்னும் அரசன் வெட்டி கடலுடன் சங்கமிக்க விட்டான். அன்று முதல் இந்நதியின் பெயர் ஷதொண்டமானாறு|| ஆகிவிட்டது.
கந்தப்பெருமானது அருளாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வாலயத்திற்கு பக்திமணம் கமழும் தெய்வீக வரலாறு உண்டு. திருச்செந்தூர் என்னும் பகுதியல் இருந்து கந்தப்பெருமான் வீரவாகுதேவரை மகேந்திரபுரிக்கு சூரனிடத்தில் தூது அனுப்பினார். தூதுவனாக வந்த வீரவாகு தேவர் முதன்முதலாக வட இலங்கையின் வல்லிநதிக் கரையில் உள்ள கல்லோடையில் காலழ எடுத்து வைத்தார். வீரவாகு தேவரது பாதச்சுவடுகள் இன்றும் ஆலயத்தின் வடக்குப் பக்கத்தில் பாதச்சுவடுகளாகக் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. வீரவாகுதேவர் பெருமானது கட்டளைப்படி மகேந்திரபுரிக்கு சூரனிடத்திற் சென்று திரும்பி திருச்செந்தூர் செல்வதற்கு மீண்டும் இந்நதிக்கரைக்கு வந்தார். வந்தபொழுது கந்திக் காலமாகி விட்டது. எனவே அவருக்கு கந்தப்பெருமானுக்குரிய சந்திப்பூஜையை செய்தார். இவ்வாறு வீரவாகுதேவரால் சந்திக் கடன் செய்யப்பட்ட இடம் சந்நிதியாக மருவி செல்வச்சந்நிதி என்ற திருப்பெயரைப் பெற்றது.
19ம் நூற்றாண்டின் முதற்பகுதியில் இந்த ஆற்றங்கரை ஓரத்தில் வாழ்ந்து வந்த பரதகுலத்தவர்களுள் மூத்தவரும் பக்திமானுமாகிய மருதர் கதிர்காமர் என்பவர் நாள்தோறும் இவ்வாற்றில் மீன்பிடித்து சீவியம் நடாத்தி வந்தார். இவர் மீன்பிக்கச் செல்லும் முன்னர் ஜவரச முனிவர் தியான வழிபாடு செய்து தவம் இயற்றிய இடமாகிய அவரது பூவரச சமாதியில் வணங்கியே மீன்பிடிப்பது வழக்கம். பெருமானார் தனது பூஜை செய்வதற்கு கதிர்காமரே ஏற்றவர் என எண்ண தனது தொண்டனாக கொள்ள விரும்பினார். அதனால் எம் பெருமான் ஆற்றங்கரையில் தன்னை நாள்தோறும் மீன்பிடிக்கும் கதிர்காமர் முன்பாக மனித உருவில் தோன்றி கதிர்காமா என்னிடம் இக் கரைக்கு வா என்று அழைத்தார். இதனைக் கேட்ட கதிர்காமர் ஆற்றின் மேல் இருந்து கரைக்கு வந்தார். இவ்வாறு வந்து சேர்ந்த வரை இறைவன் கூட்டிச்சென்று பூவரசமரத்தின் அடியையும் அதன் அருகில் வீரவாகுதேவர் சந்தி கடன் செய்த இடத்தையும் சுட்டிக் காட்டி இதில் பூஜை வழிபாடு செய்ய எல்லா வகையிலும் நீயே ஏற்றவன் என்று கூறி மறைந்தருளினார். இதைக்கண்ட கதிர்காமர் கலக்கமுற்று ஷகந்தா என்ன சோதனை என்னை ஏன் சோதிக்கிறாய்? நானோ பரதகுலத்தவன் எனது தொழிலுக்கும் உனது பூஜை வழிபாட்டிற்கும் இடையில் எவ்வளவு தூரம் உள்ளது. எங்களுக்கு இது ஒவ்வாது|| எனக் கண்ணீர் மல்க கதறியழுது மறுத்து நின்றார். இதைக் கண்ட கந்தப்பெருமான் ஷயாம் இருக்கப் பயமேன்|| எனக் கூறி பூஜை வழிபாடு செய்யும்படி கூறிய போதும் வழிபாட்டு முறை தெரியாது எனக் கூறி மறுத்தார். அப்போது எம்பெருமான் ஷநீ புனித வல்லிநதியில் மூழ்கி நான் அழைத்த போது நீ இக் கரைக்கு வந்தவடன் உனது பாவங்கள் கழுவப்பட்டு விட்டன என்று கூறி யான் காட்டும் முறையில் வாய் கட்டி மௌனபூஜை செய்வாய் எனக் கூறி அருளினார் மருதர் கதிர்காமர் நாள்தோறும் வாழையிலையில் உணவு படைத்து உண்பது வழக்கம். ஒரு நாள் இவர் அமுது செய்து உண்பதற்கு உட்கார்ந்தபோது ஓர் அசரீரி வாக்கு இவர் காதில் விழுந்தது. ஷஉனது அமுதை நீ உண்பதற்கு முன்னர் ஆற்றங் கரையில் உள்ள பூவரச மரத்தின் அருகாமையில் ஓர் அடியார் மிகுந்த பசியால் களைப்புற்றிருக்கின்றார். அவருக்கு திருவமுது செய்தபின் நீ உண்பாய் எனக் கூறியது. இதைக் கேட்ட கதிர்காமர் தனது அமுதை அப்படியே பொங்கிய பானையுடன் கொண்டு வந்து பூவரச மரத்துக்குப் பக்கத்தில் பார்த்த பொழுது உண்பதற்குரிய ஆலம் இலைகள் போடப்பட்டு உண்பதற்கு எவரும் இல்லாதிருப்பதைக் கண்டார். அவர் இறைவனை நோக்கி மனம் நொந்து இரந்து பார்த்த போது கதிர்காமர் எனக்கு உனது திருவமுதைப்படை அதன் பின்னர் என்னை உண்ணும்படி கேள் யான் உண்பேன் என்று கூறக் கேட்ட கதிர்காமர் எம்பெருமானுக்கு ஆலம் இலையில் அமுது படைத்தார். இன்றும் இவ்வாலயத்தில் அமுது எராளமாகப் பொங்கப்பட்டு கோயிலுக்குள் பொங்கும் பானையுடன் கொண்டு சென்று ஆலம் இலையில் படைக்கப்பட்டு வருகின்றது. இது வேறு எந்த ஒரு ஆலயத்திலும் இல்லாத ஒரு நடைமுறையாகும். கதிர்காமர் ஆலம் இலையில் அமுது படைத்து எம்பெருமானை திருவமுது உண்ணும்படி பணிந்து வேண்டினார். உடனே எம்பெருமானது திருஅருளால் அவர் படைத்த ஆறு ஆலம் இலை அமுதும் மறைந்து போகவே அதைக் கண்ணுற்ற கதிகாமர் ஷஆறுமுகா என்று கதறி இச்சிறியேன் படைத்த அமுதை ஏற்றுக் கொண்டு என்னையும் ஆட்கொண்டாய் இனி (எனக்கு) உமது பாதாரவிந்தத்தைப் பணிவதும் திருவமுது படைப்பதுமே எனக்கு முதல் வேலை உமக்கு படைத்துப் பூசித்த பின்பே யான் உண்பேன் என்று கூறினார். சன்னதி வேலன் அருட்செல்வம், பொருட்செல்வம், கல்விச் செல்வம் இவ்வாறு எண்ணற்ற செல்வங்களை வேண்டுவார் ணே;டுவதை ஈய்ந்த வண்ணம் இருக்கின்றார். அன்னதானக் கந்தனாகவும் காட்சி தருகின்றார். கோயிலைச் சுற்றி 45 மடங்கள் இருக்கின்றன. இதன் மூலம் அன்பர்கள் தம் நேர்த்தி மூலம் அன்னதானத்தை கொடுக்கின்றார்கள். இவ்வாறாக சன்னதி வேலவனின் சிறப்பை எடுத்துக் கூறினால் முடிவில்லாது அமையும்.