செவ்வாய் கிரகத்தினை ஆய்வு செய்யும் முகமாக முதன் முதலில் 2004ம் ஆண்டு ஜனவரி 25ம் திகதி அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தினால் அனுப்பிவைக்கப்பட்ட ரோவர் விண்கலமானது இந்தவாரம் தனது 10வது ஆண்டு நிறைவை செவ்வாய் கிரகத்தில் கொண்டாடியுள்ளது.
தற்போது 93 நாட்கள் திட்டத்தின் கீழ் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பினை தீவிரமாக ஆராய்ந்துவரும் இவ்விண்கலமானது 2,000 அடிகள் நகர்ந்துள்ளதுடன் செவ்வாயில் தரையிறங்கியதிலிருந்து இதுவரையில் 22.03 மைல்கள் நகர்ந்து ஆய்வில் ஈடுபட்டுள்ளது.
மேலும் இந்த ரோவர் விண்கலம் இதுவரையில் ஏராளமான அரிய புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.