திருச்செந்தூர். ஜன. – 28 – தைப்பூசத்திற்காக திருச்செந்தூர் மற்றும் பழனி முருகன் கோவில்களில் பக்தர்கள் குவிந்துள்ளனர். தைப்பூசத்தையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவில் நடை இன்று அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, காலை 8 மணிக்கு அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நடந்தது. பகலில் மூலவருக்கு உச்சிகால தீபாராதனையைத் தொடர்ந்து சுவாமி அலைவாயுகந்த பெருமான் சப்பரத்தில், தைப்பூச மண்டபத்தில் எழுந்தருள்கிறார். மாலையில் சிறப்பு பூஜை நடக்கிறது. சுவாமி, அம்பாள் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி கோவிலைச் சேருவர். மாலை அணிந்து குழுக்களாக பாதயாத்திரை வரும் பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். பாதுகாப்பு பணியில் 3 மாவட்ட போலீசார் ்டுபடுத்தப்பட்டுள்ளனர். போதிய குடிநீர் வசதி, சுகாதார வசதிகள் இல்லை என்று பக்தர்கள் தெரிவித்துள்ளனர். பழனியில் இன்று நடக்கும் தைப்பூச திருவிழாவைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்துள்ளனர். இவர்களில் சிலர் இன்று அதிகாலை சுவாமியை தரிசிப்பதற்காக வின்ச் இ?யங்கும் பகுதிக்கு வந்தனர். அப்போது அங்கு சுற்றித் திரிந்து கொண்டிருந்த வெறி நாய் ஒன்று பக்தர்களை கடித்துக் குதறியது. மேலும் அப்பகுதியில் பாதுகாப்பிற்கு நின்று கொண்டிருந்த தீயணைப்பு வீரர் ஒருவரையும் கடித்துக் குதறியது. இதனையடுத்து காயம் அடைந்த 10க்கும் மேற்பட்டோர் பழனி அரசு மருத்துவமைனையில் தடுப்பு மருந்து அளிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முருகனின் ஆறுபடை வீடுகளில் எங்கும் சரவணபவ கோஷங்கள் ஓங்கி ஒலிக்கிறது. பழனியில் சமீப காலமாகவே வெறிநாய் தொல்லை அதிகரித்துள்ளதாகவும், அதை உள்ள?ர் நிர்வாகமும், கோவில் நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு பக்தர்களிடம் இருந்து குமுறலாக வெளிப்படுவதை காண முடிகிறது. திருச்செந்தூர், பழனி நோக்கி கேரள பக்தர்கள் படையெடு