மட்டுவில் நடு, பூநகரி, கிளிநொச்சியில் வாழும் கேதீஸ்வரன் துஷாந்தினி அவர்களுக்கு நேற்று 27.02.2017 திங்கட்கிழமையன்று ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசனால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகள் ரியூப்தமிழ் இளைஞர்களால் பூநகரியில் வைத்து வழங்கப்பட்டது.
இவருக்கு சீமெந்துக் கற்களை அரிந்து வாழ்வை முன்னெடுக்க ஒரு டிப் அளவு ( ஒரு லாரி ) மண், ஒரு டிப் (ஒரு லாரி ) சல்லிக்கற்கள் அத்தோடு 20 மூட்டைளை உள்ளடக்கிய சீமெந்து பாக்கட்டுக்களும் வழங்கப்பட்டன.
உதவிகளை பெற்றுக் கொண்ட துஷாந்தினி போரினால் கணவனை இழந்த இரண்டு பிள்ளைகளின் தாயாராகும்.
எத்தனை துன்பங்கள் அலையலையாக தாக்கியபோதும் இப்பெண்மணி சிறந்த தன்னம்பிக்கையுடன் போருக்குப் பிற்பட்ட வாழ்வை எதிர்கொண்டு அதை வெற்றி கொள்ள மனந்தளராது போராடி வருகிறாh.;
இவருடைய தன்னம்பிக்கை வற்றி வரண்டு, தூர்ந்து போய்விடாது காப்பதற்காக இந்த உதவிகள் வழங்கப்பட்டன.
இப்பெண்மணி தான் வாழும் நகரில் உள்ள தேவைகளை கருத்தில் கொண்டு அங்கு நடைபெறும் கட்டிடப்பணிகளுக்காக சீமெந்து கற்களை அரிந்து விற்பனை செய்து வருகிறார்.
இவருடைய தொழிலை மேம்படுத்த மூலப் பொருட்களை வழங்கும் நிகழ்வாக இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசனால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவியை பயன்படுத்தி இவர் தொழிலில் முன்னேற வேண்டும், பொருத்தமான ஓர் உயர்வுத்தருணம் வர கொடுக்கப்பட்ட உதவியை இன்னொருவருக்கு உதவியாக வழங்குமளவுக்கு முன்னேற வேண்டும்.
ஆகவே இந்த உதவிகளை வெறுமனே நுகர்ச்சிக்கான உதவியாகப் பயன்படுத்தக் கூடாது கடன் அடிப்படையில் வழங்கப்படுவது போன்ற நிபந்தனை கொண்டதாகவே இருக்கும்.
மீனைக் கொடுப்பதைவிட மீன் பிடித்து வாழ ஒரு தூண்டிலைக் கொடுப்பது நலம் என்ற அடிப்படையில் இந்த உதவி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இத்துடன் நின்றுவிடாது தனது சுற்றாடலில் தன்னைப் போன்று பாதிப்படைந்து தொழில் செய்ய வழியற்றிருக்கும் இன்னொருவருக்கும் உதவி, தான் வாழும் சுற்றாடலில் வறுமையற்ற வாழ்வை மலர்விக்க பாடுபட வேண்டும் என்றும் ரியூப்தமிழ் இளைஞர்களால் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.
அனைத்து நிபந்தனைகளுக்கும் இணங்கிய பெண்மணி தமக்குக் கிடைத்த உதவிகளுக்கு விசுவாசமாக நடப்பதாகவும், ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசனுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதாகவும் கூறினார்.
நிகழ்வின் புகைப்படங்கள் சில..