Search

விரைவில் பூமிக்கு அருகில் வருகிறது விண்கல்: ஏதேனும் ஆபத்தா?

வருகிற பிப்ரவரி மாதம் 15ஆம் திகதி பூமியை அதிவேக விண்கல் ஒன்று கடந்து செல்லவுள்ளது.

143,000 டன் எடையும், 148 அடி நீளமும் கொண்ட இந்த விண்கலுக்கு  2012 DA14 என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த விண்கல் பூமிக்கு அருகில் சுமார்   25,500 கி.மீ தூரத்தில் வரவுள்ளது. எனினும் இந்த விண்கல்லால் பூமிக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என திட்டவட்டமாக நாசா தெரிவித்துள்ளது.

இதேபோன்று கடந்த 1908ஆம் ஆண்டு ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் விண்கல் விழுந்து பாரிய சேதத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published.