மாணவர்களின் ஆராய்வு ஊக்கத்தை வளர்த்து, அவர்களிடையே விஞ்ஞான பாடத்திலான ஆர்வத்தை வளர்ப்பதற்கான அய்வு நிலையமாகச் செயற்பட்டு வந்த தொண்டைமானாறு வெளிக்கள நிலையம் மீண்டும் தொண்டைமானாறு ஆலயச் சூழலில் ஆற்றங்கரையோரமாக புதிய வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சிகள் எதிர் வரும் 1 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிமுதல் 10.05 வரை உள்ள சுப வேளையில் திறந்து வைக்கப்படவுள்ளது.