Search

வரண்ட நதியா? எரிமலைக் குழம்பு ஓடிய தடயமா? -செவ்வாயிலுள்ளது என்ன?

செவ்வாய் கிரகத்தில், மனிதர்கள் வசிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளன.

இதில் அமெரிக்கா, செவ்வாய் கிரகத்திற்கு, “கியூரியாசிட்டி´ என்ற, விண்கலத்தை அனுப்பி, ஆய்வு மேற்கொண்டுள்ளது. இதேபோல், ஐரோப்பிய யூனியன் நாடுகளின் சார்பில், கடந்தாண்டு, “மார்ஸ் எக்ஸ்பிரஸ்´ என்ற விண்கலம் அனுப்பப்பட்டது.

அந்த விண்கலம், செவ்வாய் கிரகத்தில், அதிநவீன கேமராக்கள் மூலம் படமெடுத்தது.
வரண்ட நதியா? எரிமலைக் குழம்பு ஓடிய தடயமா? -செவ்வாயிலுள்ளது என்ன?
அந்த படங்களை, ஐரோப்பிய யூனியன் நாடுகளின் விண்வெளி ஆய்வாளர்கள் சோதித்து வருகின்றனர். இதில் செவ்வாய் கிரகத்தில், புராதன நதி இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

அந்த நதி, 1,500 கி.மீ., நீளம் கொண்டதாக காணப்படுகிறது. இந்த நதி, சில இடங்களில் 1,000 அடி ஆழமும், சில இடங்களில், ஆறு கி.மீ. அகலத்துடனும் காணப்படுகிறது.

பல 100 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதியில் கடும் பனி இருந்து, காலப்போக்கில் அவை உருகி, நதியாக உருவெடுத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

ஆனால், படத்தில் காணப்படும் கால்வாய், நதியாக இருக்க முடியாது என்றும், அது செவ்வாய் கிரகத்தில், எரிமலை வெடித்து ஏற்பட்ட குழம்பு ஓடிய தடயமாக, ஏன் இருக்கக்கூடாது என்ற கேள்வியும், அது தொடர்பான, விவாதமும் நடக்கிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *