மரண அறிவித்தல்
திரு தியாகராசா செல்வச்சிவம்
தோற்றம் : 06.04.1940 மறைவு: 05.03.2017
வல்வெட்டித்துறை மதவடியைப் பிறப்பிடமாகவும், சந்தி ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வச்சிவம் அவர்கள் 05 – 03 – 2017 ஞாயிற்றுக் கிழமை அன்று காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற தியாகராசா, காலஞ்சென்ற தங்கத்திரவியத்தின் மகன் ஆவார்.
அன்னார் காலஞ்சென்ற சரவணமுத்து (சாமிக்கண்டு மேத்திரியார்), காலஞ்சென்ற மகேஸ்வரியின் மருமகனும் ஆவார்.
அன்னார் இராஜேஸ்வரியின் பாசமிகு கணவரும் ஆவார்.
அன்னார் காலஞ்சென்ற சாம்பசிவம், காலஞ்சென்ற சதாசிவம், காலஞ்சென்ற பரமசிவம், காலஞ்சென்ற ஞானசிவம், காலஞ்சென்ற குருசிவம், காலஞ்சென்ற அருட்சிவம், பிறேமலதா ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னார் ஞான்வதனி, கிருஸ்ணகுமார், ஹரீந்திரகுமார், செல்வவதனி, காலஞ்சென்ற செல்வக்குமார், காலஞ்சென்ற பாலகுமார், கலாவதனி, யோகவதனி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னார் கிருஸ்ணகுமார், ரதி, கிருகலெட்சுமி, யோகச்சந்திரன், ரமேஷ், விமல்ராஜ் ஆகியோரின் மாமனும் ஆவார்.
அன்னார் பிரியங்கா, கலைச்செல்வி, தாரணி, துளசிகா, கரிகரன், சாறுஜா, ஸ்ரீராம், கணநாதன், சந்தோஷ், தர்ஷன், ஆகாஸ், ஆதித்யா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னார் காலஞ்சென்ற தங்கேஸ்வரராசா, அழகேஸ்வரராசா, தேவராசா, ஞானேஸ்வரராசா, புவனேஸ்வரராசா, காலஞ்சென்ற நாகேஸ்வரராசா, காலஞ்சென்ற செல்வேந்திரராசா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 07 – 03 – 2017 செவ்வாய்க் கிழமை ஊரணி இந்து மாயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல்
குடும்பத்தினர்