இராணுவத்தின் 6 வது பெண்கள் படைப்பிரிவில் இணைந்து கொள்ளப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த 96 தமிழ் யுவதிகள் எதிர்வரும் மார்ச் மாதம் பயிற்சிகளை முடித்து கொண்டு வெளியேறவுள்ளனர். போருக்கு பின்னர், இலங்கை இராணுவத்தில் இணைந்து முதல் பெண்கள் இவர்களாவர். இவர்களுக்கான பயிற்சிகள்
கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
இராணுவத்தில் இணைந்து கொண்ட யுவதிகளின் குடும்பங்களுக்காக விசேட வீடமைப்புத் திட்டம் ஒன்றும் கிளிநொச்சி இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய
பெரேராவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரிகேடியர் அத்துல கமமே இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.