பிரித்தானியா செய்திகள்

முதல் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய தென் கொரியா

தென் கொரியா தனது முதல் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

கே.எஸ்.எல்.வி-1 என பெயரிடப்பட்டுள்ள இந்த ராக்கெட், கோகேயுங் என்ற இடத்தில் உள்ள நாரோ விண்வெளி மையத்திலிருந்து அனுப்பப்பட்டது.

இந்த ராக்கெட்டில் அறிவியல் ஆராய்ச்சிகான செயற்கை கோளை அனுப்பி உள்ளது.

இதற்கு முன்பு கடந்த 2009ஆம் ஆண்டும், 2010ஆம் ஆண்டும் ராக்கெட் செலுத்த முயற்சி செய்து தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

தென் கொரியாவின் இந்த முயற்சி வடகொரியாவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *