வல்வை வி.க உதைபந்தாட்ட போட்டியில் 08.03.2017 விண்மீன் A வி.க மற்றும் வதிரி மொம்மஸ் வி.க வெற்றியை தமதாக்கிக் கொண்டது
பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக் அனுமதியுடன்இ லீக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் ஏழு நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இன்று றெயின்போ வி.க மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகிய உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில்
இன்று நடைபெற்ற முதலாவது சுற்றில் நியுட்டன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து விண்மீன் A விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் 3:1 என்ற கோல் கணக்கில் விண்மீன் A விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது.
இரண்டாவதாக நடைபெற்ற ஆட்டத்தில் வதிரி மொம்மஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து பருத்தித்துறை ஐக்கியம் விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் 6:2 என்ற கோல் கணக்கில் வதிரி மொம்மஸ் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது