அமெரிக்காவில் ஓட்டுநரை சுட்டுக் கொன்று குழந்தை கடத்தல்

அமெரிக்காவில் பள்ளி பேருந்து ஓட்டுநரை சுட்டுக் கொன்று, குழந்தைகளை கடத்தி சென்ற மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் பள்ளிப் பேருந்து ஒன்றில் ஏறிய துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் ஓட்டுநரை சுட்டுக் கொன்றான்.

அதன் பின் பேருந்தில் இருந்த பள்ளிக் குழந்தையைக் கடத்திச் சென்று பதுங்கு குழிக்குள் மறைந்து கொண்டான்.

குழந்தையை பத்திரமாக மீட்பதற்காக பொலிசார் அவனுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

குழந்தை கடத்தப்பட்ட தகவல் வெளியானவுடன் அங்குள்ள சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதுடன், அருகில் உள்ள மூன்று பள்ளிகளின் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published.