Search

அமெரிக்காவில் சொந்த வீட்டில் வசிக்கும் 55 சதவிகிதம் இந்தியர்கள்

அமெரிக்காவில் 55 சதவிகித இந்தியர்கள் சொந்த வீட்டில் வசிக்கின்றனர் என்று சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு துறையான “சென்சஸ் பீரோ” வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களில் 55 சதவிகிதம் பேர் சொந்த வீட்டில் வசிக்கின்றனர்.

அதே சமயம், அமெரிக்காவில் நல்ல வருவாய் உள்ள இந்தியர்களை விடவும், ஐரோப்பியர்களே அதிக அளவில் சொந்த வீடு வைத்துள்ளனர்.

ஜேர்மனியை சேர்ந்தவர்களில் 72 சதவிகிதம் பேரும், பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் 73 சதவிகிதம் பேரும் அமெரிக்காவில் சொந்த வீட்டில் வசிக்கின்றனர் எனவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published.