Search

எழும்தமிழீழம், புரட்சி கவிதை

எழும்தமிழீழம்

 

 

 

 

ஐநாவின் அமர்வும் ஆய்வறிக்கை ஆவனமும்

அனைத்ததையும் இழந்த அனாதைத்தமிழனக்கு ஆதரவளிக்குமா? இல்லை!

அழுத்தமில்லா அறிக்கையாகி ஐநாசபையையும் அவமானப்படுத்துமா?

 

இந்தியத்திருநாடு இங்கிருக்கும் தமிழனேயே இந்தியனாய் மதிப்பதில்லை

நாய்களுக்கும் கேவளமாய் நாளும்காலில்போட்டு மிதிக்கிறது

இனவெறியினிக்கும் சிங்களனாள் நாளும்சாகிறோம் நடுக்கடலில்

 

இழங்கை இந்தியனின் நட்ப்புநாடாம் பிறகு நாமெல்லாம் யாராம்?

குருதிக்கொதிக்கிறது குள்ளநரிகளின் கூட்டாட்டத்தை நினைக்கையிலே

தீப்பட்டப்புன்னுக்கு திராவகமா தரும்மருந்து

 

மூத்ததமிழனோ முத்தமிழறிஞனோ காசையும் கழகக்கண்மணிகளையும்

கங்கரசிடமிருந்து காக்கவே கங்கனம்கட்டிபோராடுகிறார்

தமிழனைக்காப்பது நான்தானென்று நாவண்மையோடு வாதடுகிறார்

 

ஆணவத்தாய் அம்மாவோ ஈழத்தமிழனை ஈனத்தமிழனாய் நினைத்து

கட்டிஇழுத்துவருவேனென்று இறுமாப்பாடைந்தவரிப்போது

தீர்மானம்மேல் தீர்மானம்போட்டு தீர்க்கத்தரசியாகிவிட்டார்

 

ஓசைபடாமல் உழைத்த தஞ்சைத்தமிழனின் ஒரேமகனுக்கோ

அப்பாவி ஈழத்தமிழனின் அழும்குரலோலம் கேட்கவேயில்லை

அன்னையின் அடங்காகோபத்திற்க்கு  ஆட்க்கொள்ளபயந்து அமைதிக்காக்கிறார்

 

தமிழ்தேசியம்பேசிய தவப்புதல்வன் ஈன்றெடுத்த இளவளுக்கோ

தமிழீழமென்றத்தமிழ்ச்சொல் தீண்டத்தகாத் தீட்டுச்சொல்

ஈழத்தமிழ்னென்றாள் அப்படியொரு இளக்காரமவருக்கு

 

காரைக்குடி காவிஞன்  உதித்தமண்ணின்  உத்தமத்தலைவனோ

ஈழத்தமிழினத்தையே எதிரிக்கலாய் நினைத்து

அன்னையும் மகளும் அழிக்கத்துடிபதை பார்த்தும்மறுக்கிறார்

 

அய்யா நெடுமாறனும் ஆவேசத்தமிழனன் சீமானும் கொலதூர்மணியும்

அய்யோசாகிறான் தமிழ்னென்று அழுதுபுறண்டாலும் ஆபத்தென்று அலறினாலும்

அன்னாந்துப்பார்க்கயாருமில்லை ஆறுதல்ச்சொல்லா நாதியில்லை.

 

முத்துக்குமாரும் செங்கொடியும்  மூட்டிய தீ

ஏழரைக்கொடி தமிழன்நெஞ்சிலும் இன்னும் எரிந்துகொண்டுதானிருக்கிறது

எரிவதுவடங்காது தமிழீழம் எழும்வரை

 

ரேவதி




Leave a Reply

Your email address will not be published.