யாழ் பல்கலைக்கழகத்தின் 3ஆம் வருட நிதியியல் (finance) பிரிவு மாணவர்கள் சுற்றுளா நிமித்தம்
வல்வெட்டித்துறை ,தொண்டமானாறு செல்வச்சன்னதி ஆலயம், தொண்டமானாறு ஆகிய பகுதிகளுக்கு
வருகைதந்து வல்வையின் பல பகுதிகளை பார்வையிட்டனர்.
அவர்கள் இங்குள்ள இடங்களை பார்வையிட்ட பின் பருத்தித்துறை ,வல்லிபுர ஆழ்வார், மற்றும் மணற்காடு போன்ற பகுதிகளை பார்வையிடச் சென்றனர்.
சுமார் 45 மாணவ மாணவிகள் இவ் சுற்றுளாவில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது, வல்வெட்டித்துறையும் அதனை அண்டிய பிரதேசங்களும் மிகவும் அழகாகவும், சிறப்பாகவும் உள்ளதாக இம் மாணவர்கன் கூறிச் சென்றனர்.
