கொலம்பிய விண்கலம் வெடித்துச் சிதறும் என்பது நாசாவுக்கு முன்பே தெரியும்: அதிர்ச்சி தகவல்

கொலம்பிய விண்கலம் வெடித்துச் சிதறும் என்பது நாசாவுக்கு முன்பே தெரியும்: அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவின் நாசா அனுப்பிய கொலம்பியா விண்கலம் கடந்த பிப்ரவரி 1ம் திகதி 2003ம் ஆண்டு பூமியை நோக்கி வந்த போது வெடித்துச் சிதறியது.

இதில் இருந்த இந்திய வம்சாவளி கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 விஞ்ஞானிகளும் வெடித்துச் சிதறி இறந்தனர்.

இது நடந்து இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவுற்றது. ஆனால் கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறிவிடும் என்பது நாசா விஞ்ஞானிகளுக்கு முன்பே தெரியும் என்ற உண்மை தற்போது வெளியாகியுள்ளது.

2003ம் ஆண்டு ஜனவரி 16ம் திகதி விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பியா விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்திய வம்சாவளி பெண்ணாகிய கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் அதில் பயணித்தனர். ஆனால் பூமி சுற்றுப் பாதைக்கு வந்த போது அமெரிக்காவின் டெக்ஸாஸ் வான்பரப்பில் வெடித்து சிதறி கல்பனா சாவ்லா உள்பட 7 விண்வெளி வீரர்களும் பலியாகினர்.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1ம் திகதியன்று இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இன்று கூட அமெரிக்காவில் கொலம்பியா விண்கல விபத்தில் உயிரிழந்தோருக்கான அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பயணித்து மரணித்தோரின் 12 குழந்தைகள் கலந்து கொண்டனர். இவர்களில் 15 வயது சிறுவனும் 32 வயது இளைஞரும் அடக்கம்.

கொலம்பியா விண்கல விபத்துக்கு அது பூமியிலிருந்து கிளம்பியபோது, சிதறி விழுந்த ஒரு foam துண்டு தான் காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்த விண்கலம் புறப்படும்போதே இந்த foam துண்டு அதன் மீது விழுந்து அந்த விண்கலத்தின் வெப்பத்தைத் தாங்கும் பாதுகாப்பு கவசத்தில் துளையை ஏற்படுத்திவிட்டது.

இதனால் இந்த விண்கலம் பூமிக்குத் திரும்பும்போது ஏற்படும் மிக உயர் அழுத்த வெப்ப நிலையால் வெடித்துச் சிதறிவிடும் என்பது அப்போதே நாசா விஞ்ஞானிகளுக்குத் தெரிந்துவிட்டது.

இது குறித்து நாசா விஞ்ஞானிகளில் ஒருவரான வெய்ன் ஹாலே தமது இணையதள பக்கத்தில் பக்கம் பக்கமாக விவரித்திருக்கிறார். அதில், கொலம்பியா விண்கலம் பழுதடைந்திருப்பது பற்றி நாங்கள் முன்னரே விவாதித்தோம்.

ஆனால் அதன் தெர்மல் பாதுகாப்பு பகுதியில் இருக்கும் பழுதை சீராக்க முடியாது என்று இயக்குனர் ஹான் ஹர்போல்ட் என்னிடம் கூறிவிட்டார்.

இந்தத் தகவல் விண்கலத்தில் பயணம் செய்த விண்வெளி வீரர்களுக்கு தெரிவிக்கக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டது என ஒரு அதிர்ச்சி தகவலை பதிவு செய்திருக்கிறார்.

அதாவது கொலம்பியா விண்கலத்தில் பிரச்சனை ஏற்பட்டிருப்பதால் நிச்சயம் அது வெடித்து சிதறிவிடும் என்பது நாசாவுக்கு முன்பே தெரிந்திருக்கிறது. ஆனால் அதை விண்கலத்தில் இருந்த விண்வெளி வீரர்களிடம் தெரிவிக்காமல் மறைத்திருக்கின்றனர்.

இதனால் அந்த விண்கலத்தில் பயணித்த 7 பேரும் பூமிக்குள் நுழைந்த அடுத்த சில நிமிடங்களில் விண்கலம் வெடித்து சிதறி பலியாயினர்.

Leave a Reply

Your email address will not be published.