ப்ரியமான தோழனிற்கு பிறந்தநாள் வாழ்த்து..
உற்ற உயிர் தோழனாம் கிருஸ்ணாவின் மறுபெயராம்
எனதன்பு சிநேகிதனிற்கு பிறந்த நாள்..!
வாழ்த்து கூற உன் தோழி- நான்..!
வருகிறதாம் அந்த நாள் என் நண்பன் பிறந்தநாள்
மாதங்களில் சிறந்த மாதமாம் கார்த்திகைதனில்
என் நண்பன் பிறந்த நாளாம்
மண்ணோ மழையால் நனைந்திட
அதிகாலை பனியோ புல் மேல் தெளித்திட
மொட்டுக்கள் எல்லாம் அழகாக பூத்திட
குருவிகள் காணம் இசைத்திட
குளிர்ந்த இளம் அதிகாலை தென்றல் உன்னை தழுவிட
சோம்பல் முறித்து போர்வை விழக்கும் உன் முன்
அத்தனை இயற்கைகளும் என் வாழ்த்துக்கள் தாங்கி காத்திருக்கும்..!
வானம் வாழ்த்த மேகங்கள் தாலாட்ட
மலர்கள் எல்லாம் மலர்தூவி வாழ்த்து கூற
துன்பங்கள் எல்லாம் மறைந்து-உன்
வாழ்வில் வசந்தமே வீச
உன் அன்பு தோழியின் முட் கூட்டிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் …!