அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து நேற்று இரவு 116 பயணிகள் மற்றும் 5 ஊழியர்களுடன் ஒரு விமானம் சியாட்டில் நகருக்குப் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது விமானிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி அங்கிருந்த டாக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிறிது நேரத்தில் சுயநினைவுக்கு வந்தபோதிலும் அவரால் தொடர்ந்து விமானத்தை இயக்க முடியாமல் காக்பிட்டை விட்டு வெளியேறினார். உடனடியாக அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டும் என்று என்று டாக்டர் தெரிவித்தார்.இந்த இக்கட்டான நேரத்தில் துணை விமானியின் துணையால் அந்த விமானம் அருகில் உள்ள போர்ட்லேண்ட் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் பயணிகள் எந்த பிரச்சினையும் இன்றி இறங்கினர். ஆபத்தான நிலையில் இருந்த விமானி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது நிலைமை பற்றி உடனடியாக தெரிவிக்கப்படவில்லை.