சிறிலங்காவுக்கு எதிரான ஜெனிவா தீர்மானம்- பிரித்தானியாவும் ஆதரவு

சிறிலங்காவுக்கு எதிரான ஜெனிவா தீர்மானம்- பிரித்தானியாவும் ஆதரவு

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நடைமுறைத் தீர்மானத்துக்கு பிரித்தானியா ஆதரவு அளிக்கும் என்று பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக மற்றும் கொமன்வெல்த் விவகார அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில் நேற்று நிகழ்த்திய உரையிலேயே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜெனிவாவில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடரில், சிறிலங்காவுக்கு எதிராக நடைமுறைத் தீர்மானம் கொண்டுவரப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதற்கு, பிரித்தானியா ஆதரவு அளிக்கும் என்று பிரித்தானிய அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள இரண்டாவது நாடு பிரித்தானியாவாகும்.

Leave a Reply

Your email address will not be published.