உயிர்வரை இனித்தாய் திரைப்படம் கடந்த 18.19.20 ம் திகதிகளில் ஒன்பது காட்சிகள் யாழ். ராஜா திரையரங்கில் அரங்கு நிறைந்த காட்சிகளாக காண்பிக்கப்பட்டது.
முதல் நாள் 10.30 மணிக் காட்சி சிறப்புக் காட்சியாக காண்பிக்கப்பட்டது மன்னார் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சாள்ஸ் நிர்மலநாதன் , வடமாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் உட்பட வல்வையின் முன்னணி கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், மற்றும் இலங்கை திரைப்பட நடிகர்கள், ரசிகர்கள் புடைசூழ விழா மங்கள வாத்தியம் முழங்க மக்கள் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு சிறப்புற நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு வல்வையில் இருந்து மூன்றுக்கு மேற்பட்ட பேருந்துகளில் ரசிகர்கள் வந்தார்கள், அதுதவிர கழகங்களும் தனியாக வந்து சிறப்பித்தன.
மேலும் செஞ்சோலை மாணவர்கள் மூன்று நாட்களும் வருகை தந்தார்கள், கைதடி முதியோர் இல்லம், கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை முதல் கல்முனை வரை பேருந்துகளில் ரசிகர்கள் வந்து மூன்று நாட்களையும் சிறப்பித்தார்கள்.
திரைப்பட இயக்குநர் கி.செல்லத்துரை, தயாரிப்பாளர் ரியூப் தமிழ் ரவிசங்கர், கதா நாயகன் வஸந்த் செல்லத்துரை, கதாநாயகி நர்வினி டேரி ஆகியோர் டென்மார்க்கில் இருந்து நேரடியாக வருகை தந்திருந்தார்கள்.
ரியூப்தமிழ் இளைஞர்கள் கவிஞர் கம்பிகளின் மொழி பிறேம் தலைமையில் சாவகச்சேரி கஜன் குழுவினரோடு இணைந்து அறுபது இளைஞர்கள் இந்ந நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர்.
அனைவருக்கும் ரியூப் தமிழ் சார்பில் அதன் அதிபர் ரவிசங்கர் சுகதேவன் வெற்றிப் பதக்கங்கள் சூட்டி கௌரவித்த நிகழ்வும் நடைபெற்றது.
Chat afsluttet










