ஐ.நாவின் இராணுவ வாகனத் தொடரணியா வல்வை மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது

ஐ.நாவின் இராணுவ வாகனத் தொடரணியா வல்வை மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது

யாழ் காங்கேசன்துறையில் நுளைந்தது ஐ.நாவின் இராணுவ வாகனத் தொடரணி

மாலியில் ஐ.நா அமைதிப்படையில் இணைந்து கொள்ளவுள்ள சிறிலங்கா இராணுவ அணிக்கான பாரிய களப் பயிற்சி ஒத்திகை காங்கேசன்துறையில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.

28.03.2017 காங்கேசன்துறையில் ஆரம்பமாகிய இந்த களப்பயிற்சியில், 15 அதிகாரிகள், மற்றும் 185 படையினர், 82இற்கும் அதிகமான இராணுவ வாகனங்களுடன் பங்கேற்றுள்ளனர்.

ஐ.நா அமைதிப்படையில் இடம்பெறுவதற்கேற்ற வகையில் வெள்ளை நிறப் பூச்சுபூசப்பட்டு, ஐ.நா கொடி பறக்கவிடப்பட்டவாறு சிறிலங்கா இராணுவ வாகனங்கள் இந்த வாகனத்தொடரணியில் பங்கேற்கின்றன.

சிறிலங்கா படையினரும் ஐ.நா சின்னத்துடன் கூடிய தலைக்கவசங்கள் மற்றும் பட்டிகளையும் அணிந்துள்ளனர்.

காங்கேசன்துறையில் இருந்து புறப்பட்ட இந்த நீண்ட இராணுவ வாகனத் தொடரணியின் பயணம் நாவலடி, விடத்தல்தீவு, ஓயாமடு, மின்னெரியா, புத்தளம், மாதுறு ஓயா, புத்தல, வழியாக சூரியவெவவில் நிறைவடைந்து

இந்த வாகனத் தொடரணிப் பயணத்தின் போது, பல்வேறு பயிற்சிகளிலும் சிறிலங்கா படையினர் ஈடுபடுகின்றன.

போர் முடிவுக்கு வந்த பின்னர், நீண்ட இராணுவ வாகனத் தொடரணி, ஐ.நா கொடி மற்றும் சின்னங்களுடன் வடக்கில் இருந்து பயணத்தை ஆரம்பித்திருப்பது குடாநாட்டு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.                                                                                                                                                                                                                          27.03.2017 காலை 751.752.காங்கேசன்துறை வல்வெட்டித்துறை பருத்தித்துறை வீதியூடாக இத்தொடரணி சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது   

 

 

 

Leave a Reply

Your email address will not be published.