கூகுள் நிறுவனம் வழங்கும் பல்வேறு சேவைகளுள் Google Play Music என்பதும் பிரபல்யமான சேவையாகும். பாடல்களை தரவேற்றம் செய்து அவற்றினை ஒன்லைனில் கேட்கும் வசதியினைக் கொடுக்கும் இச்சேவையானது தற்போது புதிய சில அம்சங்களை உள்ளடக்கியதாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் புதிய Album Artwork, புதிய Previous Button, Pinning Progress போன்றன உட்புகுத்தப்பட்டுள்ளதுடன், கைப்பேசிகளில் பயன்படுத்தும் போது முகங்கொடுக்கப்பட்ட சில பிரச்சினைகளுக்கு தீர்வும் காணப்பட்டுள்ளது. எனினும் முன்னைய சேவையின் போது வழங்கப்பட்டிருந்த தொடர்ச்சியாக 25 பாடல்களை கேட்கும் நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை.