பிரிட்டிஷ் அரச குடும்ப அரண்மனைக்கு முன்னால் கத்தியுடன் சுற்றிய நபர்: பரபரப்பில் பக்கிங்ஹாம் அரண்மனை (வீடியோ இணைப்பு)

பிரிட்டிஷ் அரச குடும்ப அரண்மனை பக்கிங்ஹாம் முன்னாள் தனது கழுத்தில் கத்தியை வைத்து அரண்மனைக் காவலாளிகள் மாறுவதை நிறுத்துமாறு கத்திக் கூச்சலிட்ட நபரை ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸ் கைது செய்துள்ளது.

மேலும் இது தொடர்பில் தெரிய வந்துள்ளதாவது,

பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் பக்கிங்ஹாம் அரண்மனை வாசல் காவலர்கள் இருவர் தமது கடமை நேரம் முடித்து செல்கையில் மீண்டும் இரு காவலாளிகள் தமது பணிக்கு வருவார்கள். இதை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவது நாள்தோறும் நடைபெற்றுவரும் வழக்கம்.

இந்நிலையில் இன்று காலை காவலாளிகள் தமது கடமையை முடித்து வெளியேறும்போது, அவர்களை வெளியேறவேண்டாம் என கூறி தன் கழுத்தில் கத்தியை வைத்துள்ளார்.

இன்று மு.ப.11:45 மணியளவில் அந்நபரைக் கைது செய்ததாக ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸ் அறிவித்துள்ளது.

இதனால் அங்கு கூடியிருந்த சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது என ஸ்கொட்லண்ட் யார்ட் தெரிவித்துள்ளது.


 

 

 

Leave a Reply

Your email address will not be published.